உத்திரபிரதேசம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி சார்பாக எம்.எல்.ஏ ஆக இருப்பவர் ராம்துலார் கோந்த். இவர் மீது கடந்த 2014 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்தததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இதில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி அன்று அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அவருக்கு சுமார் 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சோன்பத்ரா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், அவர் 2 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை பெற்றுள்ளதால் மக்கள் பிரதிநிதிகள் சட்டப்படி தனது எம்.எல்.ஏ. பதவியையும் இழந்துவிட்டார்.