பெரம்பலூர் ஆர் சி பாத்திமா தொடக்க பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளியின் நிர்வாகி தந்தை பேரருட்திரு ராஜமாணிக்கம் அடிகளார் சிறப்பு விருந்தினராக புனித டோமினிக் இல்ல தலைமை சகோதரி செல்லின் மேரி கலந்து கொண்டனர் விழாவில் இரண்டாம் வகுப்பு ஆசிரியர்கள் அனைவரையும் வரவேற்று விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முதல் வகுப்பு தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவ மாணவிகளும் மிகவும் சிறப்பாக தங்களது கலை நிகழ்ச்சிகளை வழங்கினர் மூன்றாம் வகுப்பு மாணவ மாணவிகள் கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சியை தத்ரூபமாக நடித்துக் காட்டினர் ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவிகள்
கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்து 114 மாணவ மாணவிகளும் நடனமாடி பாடல் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர் இறுதியாக கிறிஸ்து பிறப்பு செய்தியினை நிர்வாகி தந்தை வழங்கி கிறிஸ்து பிறப்பு விழாவை ஏன் கொண்டாடுகிறோம் என்பதை தெளிவாக கூறினார் இறுதியாக வந்திருந்த அனைவருக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்சகோதரி அனிதா நன்றியுரை கூறினார். இந்நிகழ்ச்சியின் முடிவு மாணவர் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து மாணவர்கள் சக மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.