கோவை, காந்தி பார்க் பகுதியில் முத்தண்ணன் குளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடித்து விற்பனை செய்து வந்தனர். அப்பகுதியில் உள்ள விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் தொழிற் சாலைகளில் இருந்து வரும் கழிவுநீர் குளத்தில் கலப்பதால் இங்கு வரும் நீரில் நுரை போன்று காணப்பட்டது. இந்நிலையில் திடீரென குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. குளத்தின் கரைகளில் இறந்த மீன்கள் ஒதுங்கி உள்ளன. மேலும் கரையில் உள்ள செடிகளுக்குள் மீன்கள் இறந்து கிடக்கின்றன. நூற்றுக் கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் குளத்தை சுற்றி உள்ள பகுதிகளில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குடியிருப்பு வாசிகளுக்கு நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. தற்பொழுது வருகின்ற புதிய வகையான காய்ச்சல்கள் கோவையில் அதிகரித்து வருகிறது. செத்து மிதக்கும் மீன்களால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுக்க இறந்து மிதக்கும் மீன்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.