புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி யில் 14.12.2023 அன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நாட்டு நலப்பணித் திட்டத்தால் நடைபெற்றது. திரு. ந. நாவுக்கரசன் காவல் ஆய்வாளர் கோட்டை போக்குவரத்து காவல் நிலையம், திருச்சிராப்பள்ளி அவர்கள் கலந்து கொண்டு சாலையின் குறியீடுகள் மற்றும் சாலை விதிமுறைகளை கடைபிடிக்கும் முறையினையும் விபத்து ஏற்படும் சூழ்நிலையில் முதலுதவி செய்யும் வழிமுறைகளையும் மாணவிகளுக்கும் புரியும் விதமாக பல பயனுள்ள கருத்துக்களை வழங்கி விழா வினைச் சிறப்புச் செய்தார். பல்வேறு விதமான வினாக்களை மாணவிகளிடம் எழுப்பி சரியான விடை கூறியவர்களுக்கு புத்தகங்களைப் பரிசாக வழங்கி பாராட்டினார்.
புது வாழ்வு அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு இரத்ததானம் வழங்குவோர் சங்கத்தில் இருந்து திரு பிளட்ஷாம் அவர்களும் கலந்து கொண்டு விபத்தில் லா உலகு செய்வோம். விபத்தானவர்களுக்கு உதவிகள் செய்வோம் என்று மனிதநேயம் குறித்து பல கருத்துக்களை மாணவிகளுக்கு வழங்கி விழா வினைச் சிறப்பு செய்தார்.
எம் கல்லூரியின் முதல்வர் முனைவர் அருள் சகோதரி இசபெல்லா ராஜகுமாரி அவர்களின் தலைமையில், கல்லூரியின் செயலர் முனைவர் அருள் சகோதரி ஆனி சேவியர் அவர்களின் முன்னிலையிலும்
இவ்விழாவானது நடைபெற்றது. இவ்விழாவானது நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் பி. மெர்லின் கோகிலா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் முனைவர் கு. டாலி ஆரோக்கியமேரி, பேராசிரியர் குழந்தை பிரியா அவர்களும் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகளுடன் இக் கூட்டமானது இனிதே நிறைவேறியது.