மக்களவையில் நேற்று 2 பேர் திடீரென புகுந்து புகை குண்டுகளை வீசினர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இன்று மக்களவை கூடியதும் பல்வேறு கட்சித்தலைவர்கள் மக்களவையில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும், இதுபற்றி விவாதிக்க வேண்டும். மற்ற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என முழக்கமிட்டனர். இதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் சபை நடத்த முடியாத அளவுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்க மிட்டனர். எனவே 2 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு பிறகும் இந்த பிரச்னையை தமிழகத்தை சேர்ந்த திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் எழுப்பினர். இதனால் அவையில் அமளி நிலவியது. இந்த நிலையில் கனிமொழி, மாணிக்கம் தாகூர் ஆகியோரை சபாநாயகர் ஓம்பிர்லா சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.