பெரம்பலூரில் அ.தி.மு.க கட்சியின் செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் கட்சியின் மாவட்ட அவைத்தலைவர் குணசீலன் தலைமையில் நடைபெற்றது . இதில் கட்சியின் அமைப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் ப.மோகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், முன்னாள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிகளில் அதிமுக கோட்டை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிரூபித்து காட்டுவோம் மாவட்ட கழகச் செயலாளர் தமிழ்ச்செல்வன் இவ்வாறு தெரிவித்தார்.