திருச்சி, அரியமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருவானந்தம் அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்த நாளிலிருந்து இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மத கலவரத்தை தூண்டும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது நடந்து கொண்டதோடு, இஸ்லாமியர்களை வஞ்சிப்பதாகவும் மேலும் தமுமுகவின் தீவிரவாத அமைப்பு எனக் கூறி அலுவலகம் அமைப்பதற்கு கட்டிட உரிமையாளர்களை இடம் தர விடாமல் தடுப்பதாகவும், அதேபோல் முஸ்லிம்கள் கூட்டு குருபானி என்பதை பண்டிகை காலத்தில் கடைபிடித்து வருவதாகவும் அது 29 ஆண்டுகளாக கடைபிடித்து வந்த நிலையில் தற்போது அதை செய்யக்கூடாது என திருவானந்தம் தடுத்து வருவதாகவும் இவரது நடவடிக்கைகள் ஆர்.எஸ்.எஸ் போன்றுள்ளது.
இது தமிழக அரசுக்கு கலங்கத்தை ஏற்படுத்துவது போன்று உள்ளதோடு கூட்டணி கட்சியான எங்களுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமுமுக நிர்வாகி ஒருவர் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக காவல் நிலையம் வந்த பொழுது அவரிடம் அநாகரிகமாக திருவானந்தம் நடந்து கொண்டதோடு
தமுமுக என்றால் பெரிய ஆளா என கூறி அராஜகத்தில் ஈடுபட்டதாகவும் இதனை கண்டித்து தான் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததாகவும் இந்நிலையில் காவல்துறை உயர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதின் பேரில் தற்பொழுது முற்றுகை போராட்டத்தை நடத்தாமல் கலைந்து செல்வதாகவும் இன்னும் பத்து நாட்களில் அவரை பணியிடம் மாறுதல் செய்யவில்லை என்றால் சாலை மறியல் உடன் கூடிய முற்றுகை போராட்டம் நடைபெறும் என திருச்சியை கிழக்கு மாவட்ட தமுமுக தலைவர் முகமது அஜார் கூறினார்.