தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சுவாமிகள் முக்தி அடைந்த காவிரி ஆற்றங்கரையில் அவரது நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் தியாகராஜருக்கு ஆராதனை விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 2024 ஜனவரி 26ம் தேதி 177ம் ஆண்டு தியாகராஜர் ஆராதனை விழா தொடங்குகிறது. விழா ஜனவரி 30ம் தேதி வரை நடைபெறும். 30ம் தேதி காலை 9 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை நடைபெறும். இதில் 500க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் திரண்டு பாடுவார்கள்.
தியாக பிரம்ம மகோத்சவ சபா இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. தொடக்க விழாவுக்கு சபா தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி.கே. வாசன் தலைமை தாங்குகிறார். ஆராதனை விழாவுக்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை திருவையாறில் நடந்தது. சுரேஷ் மூப்பனார் பந்தல்கால் நட்டினர். இதில் சபா அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.