அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளின் அக்கறையற்ற அலட்சிய போக்கினை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். அரியலூர் ஒன்றியக் குழு கூட்டம் முடிவு.
அரியலூர் கட்சி அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் T.ராயதுரை முன்னிலையில், ஒன்றியக் குழு உறுப்பினர் அரியலூர் ந.கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளர் த.தண்டபாணி கலந்து கொண்டு கட்சி உறுப்பினர் பதிவு புதுப்பித்தல், தேர்தல் நிதி, நடைபெற வேண்டிய கட்சி பணிகள் மற்றும் மக்கள் பிரச்சினைகளை முன் வைத்து நடைபெற வேண்டிய போராட்டங்கள் உள்ளடங்கிய மாவட்டக் குழு கூட்ட முடிவுகளை விளக்கிப் பேசினார். கூட்டத்தில் அரியலூர் ஒன்றிய துணைச் செயலாளர்
கல்லக்குடி மொ.மணி, ஒன்றிய பொருளாளர் அரியலூர் கு.வெள்ளையம்மாள், அரியலூர் நகர கிளை A. K.துரைராஜ், மா. நல்லம்மாள், கயர்லாபாத் கிளை து.ராஜா, பெ.பார்த்திபன், கல்லக்குடி கிளை ஆ. பெரியசாமி, ம.பசுபதி, நாகமங்கலம் கிளை S.பிச்சைப்பிள்ளை, வைப்பம் கிளை G.மணிவேல், உட்பட ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்ட முடிவுகள்: 1)கயர்லாபாத்,கல்லக்குடி, நாகமங்கலம், எருத்துக்காரன்பட்டி, ராவுத்தன்பட்டி, வைப்பம், உள்ளடங்கிய பல்வேறு கிராம மக்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வரும் 22.12. 2023 அன்று அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்வது. 2) அரியலூர் நகர அடிப்படை வசதிகள் கோரி ஆர்ப்பாட்டம் செய்வது. 3) தேர்தல் நிதியளிப்பு கூட்டம் ஜனவரி 20லிருந்து 25க்குள் முடிப்பது மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.