கோவை, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கடந்த 30.ஆம் தேதி நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு 5வது வார்டு நகர மன்ற உறுப்பினர் தேவகி தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் ஜாதிப் பெயரை பயன்படுத்தி பேசினார். இதுகுறித்து திமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில்வன் ST/SC வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள தேவகியை தேடி வருகின்றனர். இந்நிலையில் 10 நாட்களுக்கு மேலாகியும் தற்போது வரை கைது செய்யப்படாமல் உள்ள தேவகியை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வலியுறுத்தி அம்பேத்கர் மக்கள் இயக்கம் , ஆதித்தமிழர் பேரவை , மற்றும் உள்ளிட்ட சமூக அமைப்புகளின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேவகியை உடனடியாக போலீசார் கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.