Skip to content
Home » வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 13 லட்சம் மோசடி… குடும்பத்துடன் மனு..

வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 13 லட்சம் மோசடி… குடும்பத்துடன் மனு..

கடலூரை சேர்ந்த ஐயப்பன். இவர், நாகை, திட்டச்சேரி, நரிமணம், எரவாஞ்சேரி, நாட்டார்மங்கலம், திருப்பயத்தாங்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 13 பேரி டம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 13 லட்சம் வரை பணம் பெற் றுள்ளார்.எனினும், ஐயப்பன் கூறியபடி வேலை வாங்கித் தர வில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷிங் இடம் மனு அளித்தனர். அதில், பணம் மோசடி செய்த ஐயப்பன் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தங்களது பணம் மற்றும் பாஸ்போர்ட்டை மீட்டுத் தரவேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர் நாகை அருகே வேலை வாங்கித் தருவதாக கூறி 13 நபர்களிடம் மோசடி செய்த சம்பவம் நாகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!