கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 44 மாணவர்கள், 58 மாணவிகள் என மொத்தம் 102 பேருக்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட
கலெக்டர் தங்கவேல் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சமையல் கூடத்தை ஆய்வு செய்தார்.
இன்று மாவட்ட முழுவதும் உள்ள 14 பள்ளிகளில் பயிலும் 1214 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது. மாவட்டத்திற்கு மொத்தம் 56 பள்ளிகளுக்கு 6144 மிதிவண்டிகள் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக், யூடியூப், டிவிட்டர் என சமூக வலைத்தளங்கள் ஏராளமானவை உள்ளன. மாணவர்கள் பள்ளிப்படிப்புடன் சேர்த்து சமூக வலைத்தளங்களை ஆக்க பூர்வமாக பயன்படுத்தினால் எதிர்காலம் பிரகாசமாக அமையும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.