உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணி நடந்தது. பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகள் கண் பார்வைத் தொடர்பான பிரச்சினைகளுக்கு முதன்மை காரணமாக சர்க்கரை நோய் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சர்க்கரை நோயால் வரும் பார்வை இழப்பை தடுக்க சர்க்கரை நோயாளிகள் தங்கள் கண்களை 6 மாதத்திற்கு ஒருமுறை கண் விழித்திரை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும என்கின்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் விதமாக வாஸன் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வுப் பேரணி கும்பகோணத்தில் நடந்தது. பேரணியை கும்பகோணம் மாநகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன் பேரணியை துவக்கி வைத்தார். வாஸன் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜாவிட் ஹசைன் முன்னிலை வகித்துப் பேசும் போது காலை 10 மணி முதல் 12 மணி வரை அனைத்து சர்க்கரை நோயாளிகளுக்கும், மூத்த குடிமக்களுக்கும் இலவச விழித்திரை பரிசோதனை மேற்க் கொள்ளப்படும் என்றார். பேரணியில் கும்பகோணம் அன்னை கல்லூரி மாணவர்கள் பங்கேற்று கும்பகோணம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். முன்னதாக வாஸன் கண் மருத்துவமனை கும்பகோணம் கிளை மேலாளர் அஸ்வத் ராமன் வரவேற்றார். வாஸன் கண் மருத்துவமனை பொதுமேலாளர் பன்னீர் செல்வம் நன்றி கூறினார். மார்க்கெட்டிங் துறை தென்மண்டல தலைமை அதிகாரி முருகானந்தம், பணியாளர்கள் பேரணிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.