Skip to content

பக்தர்கள் மீது தாக்குதல்….. ஸ்ரீரங்கம் செக்கியூரிட்டிகள் 3 பேர் கைது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நேற்று ஆந்திர மாநில  பக்தர்கள் ,  செக்கியூரிட்டிகளால் தாக்கப்பட்டதாக  செய்தி வெளியானது. இந்த  மோதல் தொடர்பாக  செக்கியூரிட்டிகளும், ஆந்திர பக்தர் சென்னாராவ் என்பவரும் ஸ்ரீரங்கம்  போலீசில்  தனித்தனியாக புகார் அளித்தனர். அந்த புகார்களின் பேரில் செக்கியூரிட்டிகள்  பாரத், விக்னேஷ்,  செல்வகுமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அதுபோல  ஆந்திர பக்தர்கள்  சென்னாராவ்,  சாந்தாராவ் சந்தா உள்ளிட்ட பலர் மீதும்  ேபாலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *