Skip to content

வெளி மாநில பக்தர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இந்து முன்னணியினர் காத்திருப்பு போராட்டம்…

திருச்சி மாநகர் ஸ்ரீரங்கத்தில்,  சாமி தரிசனம் செய்த வெளிமாநில ஐயப்ப பக்தர் ஸ்ரீ ரங்கா ரங்கா என்று கோஷமிட்டதற்கு  கோவிலில் பாதுகாப்பில் உள்ள அறநிலையத்துறையின் காவலர்கள் மற்றும் சில காவல்துறையினர் இணைந்து ஐயப்ப பக்தரைக் கடுமையான முறையில் தாக்கி ரத்த காயத்தை ஏற்படுத்தினர். இதனைக் கண்டித்து இந்து முன்னணியினர் ஸ்ரீரங்க கோவில் அறநிலையத்துறை இணை ஆணையர் அவர்களிடம் கேள்வி எழுப்ப சென்ற போது காவல்துறையினர் இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இணை ஆணையர் வரும் வரை வெளியில் செல்ல மாட்டோம் என்று இந்து முன்னணியினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *