கோவை மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா, , பான் மசாலா,போதை வஸ்துக்கள் தடுக்கும் விதமாக கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி வால்பாறை மற்றும் கேரள மாநில எல்லைப் பகுதி சோதனை சாவடிகள் கோபாலபுரம், மீனாட்சிபுரம், நடுப்புணி, கோவிந்த புரம் பகுதிகளில் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையும் ஈடுபட்டு வருகின்றனர், இதை அடுத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் தனிப்படை போலீசார் வந்த ரகசிய தகவல் பெயரில் பொள்ளாச்சி வால்பாறை சாலை கோட்டூர் ரோடு மேம்பாலம் கீழ்பகுதிகளில் மூன்று நபர்கள் கையில் பேக்குடன் இருந்தது கண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஒரிசா மாநிலத்தில் இருந்து 6.50 கிலோ கஞ்சாகேரளா கொண்டு விற்பனைக்கு கொண்டு செல்வதாக மூன்று பேர் தெரிவித்தனர்,தனிப்படை போலீசார் கிழக்கு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி சேர்ந்த ராஜா,திருநெல்வேலி சேர்ந்த சங்கர்,கேரளா மலப்புரத்தைச் சேர்ந்த பென்னில் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது,பொள்ளாச்சி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு 2.50 கிலோவும், மீதம் 4 கிலோ பேருந்து மூலம் கேரளாவுக்கு கடத்திச் செல்வதாக காவல்துறையினர் தெரிவித்தனர்,கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரையும் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்,கடந்த சில தினங்களுக்கு முன்பு வால்பாறை பகுதியில் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் நான்கு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.