ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு நடந்து முடிந்த தேர்தலில் மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 115 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் பாஜக அபார வெற்றிபெற்றது. காங்கிரஸ் 69 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி தோல்வியடைந்தது. ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பஜன்லால் சர்மாவை ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரியாக தேர்ந்தெடுப்பதாக ராஜஸ்தான் புதிய முதல்-மந்திரியாக பஜன்லால் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் துணை முதல்-மந்திரிகளாக தியா சிங், பிரேம் சந்த் பெய்வா ஆகியோரும் சபாநாயகராக வசுதேவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்ற பஜன்லால் சர்மா (56), கட்சி மேலிடத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர். பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக நான்கு முறை பதவி வகித்தவர். நடந்து முடிந்த தேர்தலில் சங்கனேர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் புஷ்பேந்திர பரத்வாஜை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர். முதன் முறையாக எம்எல்ஏவான பஜன்லால் சர்மாவிற்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.