தமிழகத்தில் இன்று சென்னையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தமிழக முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு
மற்றும் ரொக்கப்பணம் 1000 ரூபாய், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு வழங்கப்பட்டு வருகின்றனர். மேலும் தரமான பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தரமான பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.