2023ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் இன்று காலை கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் ரவி உரையை வாசித்தார். கவர்னரை கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. அதைத்தொடர்ந்து கவர்னர் வாசித்த உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறுபொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கை மக்களுக்கு தமிழக அரசு உதவி உள்ளது. பல்வேறு துறைகளில் தமிழகம் நாட்டுக்கே முன்னோடியாக விளங்கி வருகிறது. தமிழ் மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழக அரசு பொங்கல் தொகுப்பு வழங்கி உள்ளது. கடந்த 50 அண்டு காலத்தில் தமிழக அரசு குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி அடைந்து உள்ளது. பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி உள்ளது. 2,19 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய முதல்வருக்கு பாராட்டு. போதைப்பொருள் கடத்தலை தடுக்க தமிழக அர’சு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2 புதிய பறவைகள் சரணாலயம் அரசு அமைத்துள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் பாராட்டுக்கு உரியது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.
முன்னதாக கவர்னர் உரையை தொடங்கும் முன் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க அரச தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.