இ தமிழ் நியூஸ் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளை கடந்து விட்டது. ஓராண்டாக இ.தமிழ் யூடியூப் இயங்கி வருகிறது. இந்த யூடியூப்பில் சென்னை வெள்ளம் தொடர்பாக கடந்த 10 நாட்கள் பல்வேறு வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை வேளச்சேரியில் முழங்கால் அளவு வெள்ள நீரில், தண்ணீருக்கு பயந்து வீட்டின் கேட்டை பிடித்த படி இருந்த ஒரு டாமியை வாலிபர்கள் மீட்டனர். இந்த வீடியோ இன்று காலை 10 மணியளவில் இ தமிழ் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது. வீடியோ பதிவான 1 மணி நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் பார்த்தனர். மாலை 6 மணி நிலவரப்படி அதாவது எட்டே மணி நேரத்தில் 1 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 9 மணி நேரத்தில் 1.12 லட்சம் பேர் பார்த்துள்ளனர். தொடர்ந்து பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதோடு 4,100பேர் லைக் செய்துள்ளனர். எட்டே மணி நேரத்தில் ஒரு வீடியோவை 1 லட்சம் பேர் பார்த்திருப்பது இ தமிழ் யூ டியூப் வரலாற்றில் மைல் கல்லாகும்.
8 மணி நேரத்தில் 1 லட்சம் பார்வையாளர்கள்.. ஒரே வீடியோவில் இ-தமிழ் சாதனை..
- by Authour