Skip to content
Home » சட்டமன்றத்தில் கவர்னர் உரை, எதிர்க்கட்சிகள் கண்டன முழக்கம்…. வெளிநடப்பு

சட்டமன்றத்தில் கவர்னர் உரை, எதிர்க்கட்சிகள் கண்டன முழக்கம்…. வெளிநடப்பு

  • by Authour

2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாக கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. இதற்காக காலை 9.20 முதல் உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு வரத்டதொடங்கினர்.  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி 9.30 மணிக்கு வந்தார். 9.45 மணிக்கு முன்னாள் சபாநாயகர் தனபால் வந்தார்.  முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஊதா கலர் வேட்டி கட்டி வந்தார்.ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் ஆகியோர் 9.50 மணிக்கு வந்தனர்.  அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் வந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் இந்தாண்டுக்கான கூட்டம் தொடங்கியது. சட்டப்பேரவை முதல் கூட்டத்துக்காக, கவர்னர் மாளிகையில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைமைச்செயலகத்துக்கு 10 மணிக்கு வந்தடைந்தார். அவருக்கு  காவல்துறை பேண்ட் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.  சட்டமன்ற வளாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதனை கமிஷனர் சங்கர் ஜிவால் பார்வையிட்டார்.

அவரை,  பேரவைத் தலைவர் மு.அப்பாவு, பேரவை செயலர் கி.சீனிவாசன் ஆகியோர் வரவேற்று அழைத்து வந்தனர். கூட்ட அரங்குக்குள் வந்த கவர்னர் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார் அப்போது அனைவரும் எழுந்து நின்றனர்.  அதைத்தொடர்ந்து கவர்னர் . தமிழக அரசின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்த  உரையை படிக்க முற்பட்டார். முதலில் அவர் தமிழில் சில வரிகள் பேசினார். என் இனிய  தமிழ் சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம் என தமிழில் பேசினார்.  பொங்கல் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் தமிழில் பேசினார்.

அப்போது ஆளுநரை கண்டித்ம்,  அவர் ஆன் லைன் சூதாட்ட அசோதாவுக்கு அனுமதி வழங்காததற்கும்  கண்டனம் தெரிவிக்கும் வகையில் கவர்னரை சட்டசபையை விட்டு வெளியேற வலியுறுத்தி எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூ, மார்க்சிய கம்யூ, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கவர்னரை கண்டித்து முழக்கமிட்டனர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

. அதைத்தொடர்ந்து கவனர் ரவி  உரையை படித்தார் அப்போது அவர் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து பேசினாார்.பின்னர் அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு படிப்பார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *