மேகாலயா மாநில கூடுதல் அட்வகேட் ஜெனரலாக கரூரை சேர்ந்த வழக்கறிஞர் இ.கே. குமரேசன் நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலயா மாநிலத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக இவர் பணியாற்றுவார். மதுரை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த குமரேசன், 1993ல் பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். அதைத்தொடர்ந்து கரூரில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார். பின்னர் சென்னை ஐகோர்ட், மற்றும் உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகளில் ஆஜராகி உள்ளார். ஏற்கனவே இவர் கேரள மாநிலத்துக்கும் கூடுதல் அட்வகேட் ஜெனராக சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றுகிறார்.