யூடியூப்பில் தவறான மருத்துவ அறிவுரைகளை வழங்கியதாக புகார் எழுந்த நிலையில் கோவையைச் சேர்ந்த சித்த மருத்துவ ஷர்மிகா 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க இந்திய மருத்துவ முறை ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சமீபத்தில் கர்ப்பம் தரிப்பது, உணவு பழக்கங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில் சம்மந்தப்பட்ட புகார்களின் அடிப்படையில் 15 நாட்களுக்குள் ஷர்மிகா விளக்கம் அளிக்க இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது…. சித்த டாக்டர் ஷர்மிகா பாஜ மாநில நிர்வாகி டெய்சியின் மகள் என்பது குறிப்பிடதக்கது..