Skip to content

அட்டைப்பெட்டியில் குழந்தையின் சடலம்…. சென்னை அரசு மருத்துவமனை ஊழியர் சஸ்பெண்ட்

  • by Authour

வடசென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த  மசூத் என்பவரின் மனைவி  சவுமியா,   கர்ப்பிணியான இவருக்கு கடந்த 5ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது சென்னை  மாநகரம்  வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்தது.  அவர் வசித்து வந்த பகுதி வெள்ளக்காடாக  இருந்ததால் உதவிக்கு யாரையும் அழைக்க முடியவில்லை.   ஆம்புலன்சுக்கு  தொடர்பு கொண்டார் மசூத்.  ஆனால்  ஆம்புலன்ஸ் எதுவும்  அங்கு  வரவில்லை.  இந்த நிலையில் சவுமியாவுக்கு  வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்தது.  தொப்புள் கொடியை துண்டிக்க  அவர்களுக்கு எந்த வழியும் தெரியவில்லை.

பக்கத்து வீட்டுக்காரர்கள் தாயையும் குழந்தையையும் சைக்கிள் ரிக்சாவில்  அருகில் உள்ள அரசு  மருத்துவமனைக்கு அழைத்துச்  அங்கு, ​​கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர்,  கதவை திறக்கும்படி சத்தம்  போட்டனர். உள்ளே  இருந்து யாரும் பதிலளிக்கவில்லை.    சவுமியா துடித்துக்கொண்டிருந்தார். எனவே சற்று தொலைவில் உள்ள   முத்து என்ற தனியார்  மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.  ஆனால் அங்கிருந்த   ​​மருத்துவர்களும்  முதலில்

மறுத்துள்ளனர், ஆனால்  போலீசார்  தலையிட்ட பிறகு தாய்க்கு சிகிச்சை அளித்தனர்.

பின்னர் தாயையும், குழந்தையையும் சென்னை   கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர்.  அங்கு குழந்தை இறந்தது.

அந்த குழந்தைக்கு இறுதிச்சடங்கு செய்ய ரூ.2500 தர வேண்டும் என மருத்துவமனை ஊழியர்கள் கேட்டனர். ஆனால்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மசூத்திடம்  கையில் பணம் எதுவும் இல்லை. எனவே  பணம் இல்லை என்றார்.  இதனால்   குழந்தையின் சடலத்தை  பிணவறையில் வைத்து விட்டனர்.  குழந்தையின் சடலத்தை கேட்டு  மசூத்  போராடினார். இந்த நிலையில்  குழந்தை உடலை,  மளிகை சாமான்கள் கட்டுவது போல ஒரு அட்டைப்பெட்டியில் போட்டு நேற்று கொடுத்து விட்டனர்.

அந்த உடலை வாங்கி வந்த மசூத்   அக்கம், பக்கத்தினர் உதவியால்  குழந்தையின் உடலை  அடக்கம் செய்தார். இதுபற்றிய செய்தி  சமூகவலைதளங்களில் வெளியானது. இந்த நிலையில்  அட்டைப்பெட்டியில் குழந்தையின் சடலத்தை வைத்து கொடுத்ததற்காக  கே.எம்.சி.  மருத்துவமைனை பிணவறை  உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  அப்போது பணியில் இருந்த டாக்டர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டது. இது குறித்து  மேல் விசாரணை நடத்தப்படும் என்று மருத்துவ கல்வி இயக்குனர் சங்குமணி  தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *