ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 15ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியின் 27 வது ஆண்டு துவக்க விழா மற்றும் பூரண மதுவிலக்கு உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலை திருவெறும்பூர் மலைக் கோவிலில் இருந்துதிருவெறும்பூர் வரை நடந்த இருசக்கர வாகன பேரணிக்கு திருச்சி மாவட்ட செயலாளர் பிச்சைமுத்து தலைமை வைத்தார்.பின்னர் திருவெறும்பூரில் புதிய தமிழகம் கட்சியில் கொடியை பிச்சைமுத்து ஏற்றி வைத்தார்.இந்த விழாவில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.