புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவை கொட்டிய சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக் கோரி வரும் 11-ம் தேதி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்.. வேங்கைவயலில் நடந்த இழிவான குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இதை கண்டு கொள்ளாமல் இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் விசிக சார்பில் வரும் 11-ம் தேதி ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளார்…