கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருச்செங்கோட்டில் இருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம், கொல்லம் பட்டியை சேர்ந்த பிரபு என்ற ஓட்டுநருடன் மதுரை சென்று திரும்பி மீண்டும் திருச்செங்கோடு சென்ற பொழுது டாரஸ் லாரி, தடாகோவில் பிரிவு அருகே வரும்பொழுது தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து குறுக்கே திரும்பும்போது எதிர்பாராத விதமாக பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் முன் பக்க கண்ணாடி உடைத்துக் கொண்டு வெளியே விழுந்ததில், தலையில் காயம் ஏற்பட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக கல்லூரி பேருந்தில் மாணவ, மாணவிகள் யாரும் இல்லை. விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்து நடந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி வெளியாகி உள்ளது. தற்போது அந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லாரி-பஸ் மோதி விபத்து…. பஸ்சின் கண்ணாடி உடைந்து வௌியே விழுந்த டிரைவர்…. பரபரப்பு
- by Authour