ஒடிசாவைச் சேர்ந்த பவுத் டிஸ்டிலெரி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் கடந்த புதன்கிழமை வருமான வரித் துறை சோதனை மேற்கொண்டது. மூன்றாவது நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்தது. இந்தச் சோதனையில் இதுவரையில் ரூ.200 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிறுவனம் உரிய ஆவணங்கள் இல்லாமல் மதுபானங்களை விற்று வந்ததாகவும் இதன் மூலம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் வருமான வரித் துறைக்கு தகவல் கிடைத்தது.
இது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் சாகுவுக்கு தொடர்புடையநிறுவனம் . இதனால்,அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது ஒடிசா மாநிலம் பாலாங்கிர் மாவட்டத்தில் அமைந்துள்ள பவுத் டிஸ்டிலெரி நிறுவனத்தின் அலுவலத்தில் ரூ.200 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மற்ற இடங்களிலும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணத்தை எண்ணுவதற்கு 36 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் 157 பைகளில் இந்தப் பணம் நிரப்பப்பட்டு லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.