முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான அன்னை சோனியாகாந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தந்தை ரோவர் பள்ளி வளாகத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில்அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் ரோவர் கல்வி குழுமத்தின் துணை இயக்குநரான ஜான் அசோக் வரதராஜன், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன், ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுதிறனாளிகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட முக்கிய பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய இளைஞர் காங்கிரஸ் கட்சியினருக்கு மாற்றுதிறனாளிகள் நன்றி தெரிவித்தனர்
இதில் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி, காங்கிரஸ் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜீவ்காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.