மிக் ஜாம் புயலால் பாதிப்பிற்காளான சென்னை மக்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பாபநாசம் கிளைச் சார்பில் 15 ஆயிரம் மதிப்பிலான பிஸ்கட், மேகி, போர்வை உள்ளிட்ட துணி வகைகள், மளிகைப் பொருட்கள் பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டனிடம் வழங்கப்பட்டது. இதில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பாபநாசம் கிளை சேர்மன் சரவணன், செயலர் விவேகானந்தம், ஆயுட்கால உறுப்பினர்கள் செந்தில் நாதன், அறிவழகன், பக்ருதீன், ஆசிப் அலி உட்பட பங்கேற்றனர்.