திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டது பிரணவ் ஜூவல்லர்ஸ். இந்த நகைக்கடை மதுரை, தஞ்சை, புதுச்சேரி என பல்வேறு இடங்களில் கிளைகளை தொடங்கியது. செய்கூலி , சேதாரம் இல்லை என கவர்ச்சிகரமான விளம்பரம் செய்ததுடன் நகை சீட்டுகளும் சேர்த்தனர். இதன் மூலம் ரூ. 100 கோடி வரை பொதுமக்களிடம் வசூலித்ததாக கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன் திடீரென கடைகளை மூடிவிடிட்டு பிரணவ் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் மதன், அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் தலைமை மறைவாகி விட்டனர். இந்த நிலையில் இவர்கள் வெளிநாடு தப்பி விடாமல் தடுக்க போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் வௌியிட்டனர். தொடர்ந்து அவர்களை தேடியும் வந்தனர். இந்த நிலையில் நேற்று மதனும், கார்த்திகாவும் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
Tags:பிரணவ் ஜூவல்லரி