சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பேருந்து போக்குவரத்து, ரயில் சேவை ஆகியவை பாதிக்கப்பட்டன. மேலும் இந்த கனமழையினால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணையில் கடந்த 4-ஆம் தேதி பெருவெள்ளத்தில் சிக்கி டெலிவரி ஊழியர் முருகன் உயிரிழந்தார். 3 நாட்களுக்கு பிறகு அவரது சடலம் இன்று மீட்கப்பட்டது. நிவாரண முகாமில் இருந்த முருகன், வீட்டிலிருந்த தந்தையை பார்த்துவிட்டு வரும் போது நீரில் சிக்கியுள்ளார். தொலைத்தொடர்பு சேவை இல்லாததால் அவரின் நிலை குறித்து குடும்பத்தினர் தெரியாமலேயே இருந்துள்ளனர்.