Skip to content
Home » தமிழகம் முழுவதிலம் உள்ள 15 தலைமை ஆசிரியர்களுக்கு D.E.O பதவி உயர்வு..

தமிழகம் முழுவதிலம் உள்ள 15 தலைமை ஆசிரியர்களுக்கு D.E.O பதவி உயர்வு..

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் அரசு உயர்நிலைபள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் உள்ளவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி தற்போது 15 தலைமை ஆசிரியர்களுக்கு டிஇஓ பதவிஉயர்வு வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் காட்டுக்கரணை உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முரளி, மதுரை மாவட்ட கல்வி (இடைநிலை) அலுவலராகவும், காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லதா விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாவட்ட கல்வி (இடைநிலை) அலுவலராகவும், தேனி மாவட்டம் அப்பிப்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தென்காசி மாவட்ட கல்வி (இடைநிலை) அலுவலராகவும், திருவள்ளூர் மாவட்டம் லட்சுமிபுரம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தரசன் நீலகிரி மாவட்ட கல்வி (தொடக்கக்கல்வி) அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், சேலம் மாவட்டம் கொங்குப்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மரியசெல்வம் கோவை மாநகராட்சி கல்வி அலுவலராகவும், திருவண்ணாமலை மாவட்டம் மல்லவாடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மாவட்ட கல்வி (தொடக்கக்கல்வி) அலுவலராகவும், சேலம் மாவட்டம் குஞ்சாண்டியூர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாதேஸ் தாரமங்கலம் மாவட்ட கல்வி(இடைநிலை) அலுவலாகவும், மதுரை மாவட்டம் மேலக்கோட்டை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரகுமார் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்ைட மாவட்ட கல்வி (தொடக்கக்கல்வி) அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமாவதி திருநெல்வேலி மாவட்ட கல்வி (இடைநிலை) அலுவலராகவும், மயிலாடுதுறை சிஇஓ நேர்முக உதவியாளர் முருகன் நாகப்பட்டினம் மாவட்ட கல்வி (தனியார் பள்ளிகள்) அலுவலராகவும், மதுரை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் குருநாதன் தூத்துக்குடி மாவட்ட கல்வி (இடைநிலை) அலுவலராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரேம்குமார் நாகப்பட்டினம் மாவட்ட கல்வி (ெதாடக்ககல்வி) அலுவலராகவும், சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி நீலகிரி மாவட்ட கல்வி (இடைநிலை) அலுவலராகவும், கடலூர் மாவட்டம் அழகியநத்தம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மாவட்ட கல்வி (இடைநிலை) அலுவலராகவும், புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் மேல்நிலைப்பள்ளி சுதாகர் ராமநாதபுரம் மாவட்ட கல்வி (இடைநிலை) அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *