சென்னையில் புயல்மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அத்தியாவசியப்பொருட்கள் கிடைக்காமல் அல்லல் பட்டுவருகின்றனர்.பல பகுதிகளில் பால்,தண்ணீர்,மளிகைப்பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.இதனால் தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்து நிவாரணப்பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருகிறது.அதன் ஒருபகுதியாக பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் நிவாரணப்பொருட்களை சேகரித்து மொத்தமாக சென்னைக்கு அனுப்பிவைத்து
வருகிறது.இந்தநிலையில் டத்தோபிரகதீஸ்குமார் சார்பில் அரிசி,பெட்ஷீட்,மளிகைபொருட்கள்,வாட்டர்பாட்டில் என ரூ2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது.பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்திடம்ஒப்படைக்கப்பட்ட இந்த நிவாரணப்பொருட்கள் சென்னை புழுதிவாக்கம் பகுதிமக்களுக்குவழங்குவதற்காக எடுத்துச்செல்லப்பட்டது.