பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2017 -ம் ஆண்டு பிலிமிசை கிராமத்தைச் சிறுமியை எதிரி சுரேஷ் (32/17) த/பெ சின்னதுரை வடக்குத்தெரு, பிலிமிசை கூத்தூர், ஆலத்தூர், பெரம்பலூர். என்பவர் மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாக பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு இன்று 06.12.2023-ம் தேதி குற்றம் நிரூபிக்கப்பட்டது.இவ்வழக்கின் சுரேஷ்(32/17) வடக்குத்தெரு, பிலிமிசை கூத்தூர், ஆலத்தூர், பெரம்பலூர். என்பவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூபாய் 50000/- அபராதமும் அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை எனவும் தண்டனை விதித்து தீர்ப்பளித்த பெரம்பலூர் மாவட்ட குடும்பநல நீதிமன்ற நீதிபதி தனசேகரன் உத்தரவிட்டுள்ளார்.