திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் பஸ் நிறுத்தம் பகுதியில் சுற்று திரிந்தவர் ஞானசேகரன் (வயது 55) இவர் திருமணமாகாதவர் காச நோயால் பாதிக்கப்பட்டவர். சம்பவத்தன்று ஞானசேகரன் பொன்மலை ரயில்வே பணிமனை அருகே தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அவரைபக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஞானசேகரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.