Skip to content

திருச்சியில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி மேல சிந்தாமணி சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவருக்கு மகேந்திரன், (வயது 20) மகாலிங்கம் (வயது 20)என்ற இரட்டை பிள்ளைகள் உள்ளனர். இந் நிலையில் மகாலிங்கம் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.டபிள்யு முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் மகாலிங்கம் இரவு நேரத்தில் ஒரு சம்சா கடையில் வேலை பார்த்து வந்தார்.மேலும் மகாலிங்கம் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்தார் அதனால் கல்லூரிக்கும் இரவு நேரத்தில் சம்சா கடைக்கு வேலைக்கும், செல்லாமல் இருந்து வந்தார் இதனால் மன உளைச்சலில் காணப்பட்ட மகாலிங்கம் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் ஆஸ்பெட்டாஸ் சீட்டில் உள்ள குழாயில் கமிற்றில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவத்துக்கு விரைந்து சென்று மகாலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *