Skip to content
Home » கைதி தப்பி ஓட்டம்…. திருச்சியில் பரபரப்பு….

கைதி தப்பி ஓட்டம்…. திருச்சியில் பரபரப்பு….

திருச்சியை அடுத்த கம்பரசம்பேட்டையில் விசாலாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் கடந்த 2ந்தேதி கொள்ளையர்கள் புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ. 7 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர். இது தொடர்பாக ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை பிடித்தனர்.

இதில் சிறுவர்களை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
பின்னர் பிடிபட்ட பாலக்கரை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (வயது20), எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (24) ஆகிய 2 பேரையும் நேற்று இரவு நீதிபதி முன்பு ஆஜர் படுத்துவதற்காக போலீஸ் வாகனத்தில் அழைத்து வந்தனர்.

காஜாமலை காலனியில் உள்ள நீதிபதியின் வீட்டு முன்பு வாகனத்தை நிறுத்தி இருவரையும் வாகனத்தில் இருந்து இறக்கி நீதிபதி வீட்டுக்கு அழைத்து சென்றனர். அப்போது மகேந்திரன் போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடினார். இருட்டாக இருந்த காரணத்தால் அவனைப் பிடிக்க இயலவில்லை.

பின்னர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இரவு முழுவதும் தேடுதல் வேட்டை நடந்தது. இருப்பினும் போலீஸ் கண்ணில் மகேந்திரன் சிக்கவில்லை. நீதிபதி முன்பு ஆஜர் படுத்த கொண்டுவரப்பட்ட திருட்டு வழக்கு கைது தப்பி ஓடிய சம்பவம் நேற்று இரவு காஜாமலை காலனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு மகேந்திரனை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!