பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட பொது செயலாளர் முகமது சித்திக் வரவேற்றார். தெற்கு மாவட்ட செயலாளர்கள் ஏர்போர்ட்.மஜீத், அப்பாஸ், ஆகியோர் முன்னிலைவகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எஸ்.டி.பி. ஜ.கட்சியின் மாநில தலைவர் நெல்லை.முபாரக் கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றினார்.மேலும்,ஜமாத்துல் உலமா சபையின் திருச்சி மாநகர் தலைவர் அப்துல் சலாம் அன்வாரி, விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் ஆலிமா மெஹ்ராஜ் பானு ஆகியோர் கண்டன உரையாற்றினர்கள்.
எஸ். டி.டி.யு. மாவட்ட துணைத் தலைவர் மீரான் மைதீன் மற்றும் வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் ஷேக் ஆகியோர் இடிக்கப்பட்ட பாபர் மசூதியை மீட்கக் கோரி கண்டன கோஷங்கள் முழங்கினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொகுதி,கிளை,அணி நிர்வாகிகள்,செயல்வீரர்கள், ஜமாத்தார்கள்,பொதுமக்கள், பெண்கள் உட்பட 1000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் மதர் ஜமால் முஹம்மது தொகுத்து வழங்கினார்கள்.
முடிவில் மாவட்ட துணைத் தலைவர் பிச்சை கனி நன்றி கூறினார்.