Skip to content

பாபர் மசூதி இடிப்பு தினம்.. திருச்சியில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்… 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிச.06 அன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட இந்திய நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதனடிப்படையில் இன்று திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட பொது செயலாளர் முகமது சித்திக் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தெற்கு மாவட்ட செயலாளர்கள் ஏர்போர்ட்.மஜீத்,தளபதி அப்பாஸ்,மாவட்ட பொருளாளர் Dr.S.பக்ருதீன்,மாவட்ட செய்தி தொடர்பாளர் Er.N.G.சதாம் உசேன்,தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பொன்னகர்.ரபீக்,K.முபாரக் அலி,ராஜா முகமது,Y. ரஹிம்,A.S. அப்துல் காதர் ( பாபு) ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட

SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை.முபாரக் அவர்கள் கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

மேலும்,ஜமாத்துல் உலமா சபையின் திருச்சி மாநகர் தலைவர் R. அப்துல் சலாம் அன்வாரி, விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் ஆலிமா.M. மெஹ்ராஜ் பானு ஆகியோர்கள் 31 ஆண்டு பாபர் மசூதிக்கு இழைக்கப்பட்ட அநீதியை பற்றி கண்டன உரையாற்றினர்கள். SDTU மாவட்ட துணைத் தலைவர் மீரான் மைதீன் மற்றும் வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் ஷேக் ஆகியோர்கள் அநீதியாக இடிக்கப்பட்ட பாபர் மசூதியை மீட்கக் கோரி கண்டன கோசங்கள் முழங்கினார்கள்.

வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991 ஐ வலுவாக அமல்படுத்தி அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் ஒன்றிய, மாநில அரசுகளும், நீதித்துறையும் பாதுகாக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் SDTU மாநில செயலாளர் K.முஹம்மது ரபீக்,திருவெறும்பூர் தொகுதி தலைவர் அப்பாஸ் மந்திரி, கிழக்கு தொகுதி தலைவர் முகமது வாசிக்,மேற்கு தொகுதி தலைவர் சிராஜ்,வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் அப்துல் மாலிக்,SDTU மாவட்ட தலைவர் முஸ்தபா,மருத்துவர் அணி தலைவர் Dr. இக்பால்,சுற்றுச் சூழல் அணி தலைவர் SS.ரஹ்மதுல்லா,தொண்டரணி தலைவர் முகமது ஆரீப் ,விம் மாவட்ட தலைவர் தௌலத் நிஷா , கல்வியாளர் அணி ஒருங்கிணைப்பாளர் பத்ரு ஜமான், ஊடக அணி மாவட்ட தலைவர் KSA.ரியாஸ்,மற்றும் தொகுதி,கிளை,அணி,நிர்வாகிகள்,செயல்வீரர்கள், ஜமாத்தார்கள்,பொதுமக்கள், பெண்கள் உட்பட 1000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் மதர்.Y. ஜமால் முஹம்மது அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். இறுதியாக மாவட்ட துணைத் தலைவர் பிச்சை கனி நன்றியுரை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *