Skip to content
Home » திருச்சியில் உலக மண் தின விழிப்புணர்வு உறுதி மொழி….

திருச்சியில் உலக மண் தின விழிப்புணர்வு உறுதி மொழி….

  • by Senthil

திருச்சி, செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தண்ணீர் அமைப்பின் சார்பாக உலக மண் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளரும் தண்ணீர் அமைப்பின் செயல்தலைவருமான  கே.சி. நீலமேகம் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் எழிலரசி முன்னிலையில் நடந்தது. தண்ணீர் அமைப்பின் செயலர் பேராசிரியர் கி.சதீஷ் குமார் உறுதி மொழியை வாசிக்க மாணவர்கள் ஆசிரியர்கள் ஏற்றனர். இந்நிகழ்வில் மண்வளம் காக்க நாட்டு மரக்கன்றுகள், நடுதல், இருக்கும் மரங்களை வெட்டாமல் தடுத்தல், காத்தல், வளர்த்தல்

மற்றும் நிலவளம், நிலத்தடி நீர், நிலத்தில் நச்சுக் கழிவுகள், குப்பைகள் கொட்டாமல் வளமாய் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும் என்று உறுதிமொழியும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

மேலும் செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியர் எழிலரசி தலைமையில் மாணவர்கள் கவிதை, பேச்சு, நாடகம், வில்லுப்பாட்டு ஆகியவற்றை நிகழ்த்திக் காட்டினர். பின்னர் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!