இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேருவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா. சுப்ரமணியனும் இன்று (5/12/2023) வேளச்சேரி ஏரி சுற்றியுள்ள பகுதியில் மழைநீரல் பதிக்கப்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, பால் போன்ற அதியவசிய பொருட்கள் கொண்ட நிவாரண பொருட்களை வழங்கினார்கள் .
இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “‘மிக்ஜாம்’ புயலின் காரணத்தால் பெய்த கன மழையால், சென்னை வேளச்சேரி சாலை – ஐந்து பர்லாங் சாலை சந்திப்பில் கட்டுமானப் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட 80 அடி பள்ளத்தில் பெருமளவில் மழைநீர் தேங்கியது. அங்கு பணியாற்றிய இருவர் மழை நீரில் சிக்கிய நிலையில், அவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த மீட்பு பணியை மாண்புமிகு அமைச்சர்கள் அண்ணன் கே.எம்.நேரு மற்றும் அண்ணன் மா.சுப்பிரமணியன் ஆகியோருடன் நேரில் ஆய்வு செய்தோம். இருவரையும் மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு மீட்பு படையினரிடம் வலியுறுத்தினோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.