ஆந்திராவின் பப்பட்லா ஓங்கோல் இடையே கரையை கடந்தது மிக்ஜாம் புயல். 110 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது மிக்ஜாம். பிற்பகல் 3 முதல் 4.30 மணி வரை கரையை கடந்த மிக்ஜாம் புயல். புயல் கரையை கடந்த நிலையில் ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது. 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. தீவிர புயலாக மிக்ஜாம் புயல் வலுவிழந்து கரையை கடந்தது. மிக்ஜாம் புயலால் ஆந்திராவில் 314 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகம், ஒடிசா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆந்திரா வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.