Skip to content

கழிவு நீர் கால்வாய் குறித்து தவறான தகவலை எம்எஸ் விஜயபாஸ்கர் பரப்புகிறார்… ஊ.ம.தலைவர் குற்றச்சாட்டு…

கரூர் மாவட்டம், ஆண்டான் கோயில் கிழக்கு பகுதிக்கு உட்பட்ட சஞ்சய் நகரில் நேற்று இந்த பகுதிக்கு ஆய்வுக்கு வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மக்களிடம் ஒரு பொய்யான அறிக்கையை ஊடகம் மற்றும் பத்திரிகைகளில் செய்தி பரப்பி வருவதாக ஆண்டான் கோயில் மேற்கு ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி குற்றம் சாட்டினார்

பொய்யான தகவலுக்கு விளக்கம் அளித்த தாந்தோணி ஊராட்சி ஆண்டான் கோயில் மேற்கு ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி கூறுகையில்:

ஆண்டான் கோவில் மேற்கு ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தர் நகர் அமிர்தாம்பாள் நகர் திருமால் நகர் ராஜீவ் காந்தி நகர் நியூ சரஸ்வதி நகர் குபேரன் நகர் சோழ நகர் பகுதியில் ஈரோடு சாலைக்கு தென்புறம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டி வருவதாகவும் ஆனால் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆய்வு என்ற பெயரில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை அழைத்துக் கொண்டு ஆய்வு செய்துள்ளார்.

மேலும் ஆண்டான் கோவில் மேற்கு ஊராட்சி இருந்து ஆண்டான் கோவில் கிழக்கு ஊராட்சி சோழன் நகர் வரை ஈரோடு ரோட்டுக்கு தென் பின்புறம் கழிவுநீர் கால்வாய் நேற்று ஆய்வு செய்த இடம் சஞ்சய் நகர் பகுதியாகும்.. இரு பகுதிக்கும் சம்பந்தமில்லாத கழிவு நீர் கால்வாய் சுட்டிக்காட்டி தவறான செய்திகளை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார்

தற்போது சஞ்சய் நகர் பகுதிக்கு புதிய கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே அருகிலுள்ள தனியார் கல்லூரி உரிமையாளர்களிடம் பேசி கழிவுநீர் கால்வாய் செல்வதற்கு தடைஇல்லா சான்று பெற்றுவிட்டதாகவும். ஆனால் மக்களிடம் ஒரு தவறான செய்தியை முன்னாள் அதிமுக அமைச்சர் பரப்பி வருவதாக கூறினார்

மேலும் இவர் ஐந்து வருடம் அமைச்சராக இருந்த பொழுது இவர் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கொண்டு சாலை கழிவுநீர் கால்வாய் வந்ததாகவும் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி கூறினார்

மேலும் மக்கள் தேவைக்காக செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் முறையாக அனுமதி பெற்று வருவதாகவும் ஆனால் முன்னாள் அமைச்சர் நீதிமன்றத்தை நாடுவது வேலையாக உள்ளார் என்று குற்றம் சாட்டினார்

ஆண்டான் கோவில் மேல்பாகத்தில் உள்ள கழிவு நீர் … கீழ்பாகம் பகுதிக்கு வரக்கூடாது என்று சொன்னால் கர்நாடகாகாரர் எப்படி நமக்கு தண்ணீர் தருவார். நீங்கள் ஒரு முன்னாள் அமைச்சர் ஆண்டான் மேற்கு மற்றும் கிழக்கு ஊராட்சி உங்கள் தொகுதியில் தான் இருந்தது மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் சில நாட்களுக்குள் கழிவு நீர் திட்ட கல்வாய் பூமி பூஜை போட உள்ளதாகவும் சஞ்சய் நகர் பகுதிக்கு ஒன்றரை மாதத்திற்குள் கழிவுநீர் கால்வாய் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்று தெரிவித்தார்.

தற்போது உயர்நீதிமன்றத்தில் கந்தன் மகாலில் இருந்து சோழ நகர் வரை உள்ள கழிவுநீர் கால்வாய் அந்தப் பகுதிக்கு மட்டுமே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் உத்தரவின் அடிப்படையில் தற்போது ஆய்வு செய்யப்பட்ட வருகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!