தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 64 இடங்களை கைப்பற்றியது. எனவே காங்கிரஸ் கட்சி அங்கு ஆட்சி அமைக்கிறது. தெலங்கானா மாநிலம் அமைந்த பிறகு 2 தேர்தல்களில் வெற்றி பெற்று பிஆர்எஸ் கட்சி ஆட்சியே நடந்தது. இப்போது முதன்முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.
தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று உள்ளார். எனவே அவரே அந்த மாநில முதல்வராக தேர்வு செய்யப்படுகிறார். அவர் வரும் 7ம் தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.