மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இந்த நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து மீட்புப் பணியில் ஈடுபடுவதுதான் உடனடி தீர்வுக்கு வழிவகுக்கும். இதை வலியுறுத்தி முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் ”
இந்த புயல் #CycloneMichaung பாதிப்புகளை கொடுத்தாலும் மனவுறுதியையும், ஒற்றுமையையும் வெளிக் காட்ட வாய்ப்பையும் சேர்த்தே கொடுக்குது.சென்னை மக்களே உங்க சக்தியே தலைக்கு மேல வெள்ளம் போனாலும் தைரியமா ஒண்ணுக்குள்ள ஒண்ணா சேர்ந்து நின்னு ஜெயிக்கிறது தான். தைரியமா இருங்க #ChennaiFloods
” எனப்பதிவிட்டுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங் தமிழ் மக்கள் பாசத்தால் ஈர்க்கப்பட்டுள்ளார். இதனால் அடிக்கடி தமிழில் டுவீட் செய்வது வழக்கம். தற்போது சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நிலையில், மக்களுக்கு ஆதரவாக பதிவு செய்துள்ளார்.