Skip to content
Home » புயல் மீட்பு பணிக்காக சென்னை விரைந்த 272 தூய்மை பணியாளர்கள்….

புயல் மீட்பு பணிக்காக சென்னை விரைந்த 272 தூய்மை பணியாளர்கள்….

  • by Authour

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கடல் போல் காட்சியளிக்கிறது. பொது மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லவும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகின்றனர். இந்நிலையில் மிக்ஜாம் புயல் நிவாரண பணிக்கு சென்னைக்கு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மூலம் 250 தூய்மை பணியாளர்கள் மற்றும் 10 தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், மூன்று சுகாதார அலுவலர்கள் வெள்ள தடுப்பு உபகரணங்களுடன் ஐந்து பேருந்துகள் மூலம் இன்று மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன்   கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தனர். அருகில் மண்டலத் தலைவர் திருமதி. துர்கா தேவி, நகர் நல அலுவலர் திரு. மணிவண்ணன், மாநகராட்சி உதவி ஆணையர்கள்,சுகாதார அலுவலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் கரூர் மாவட்டம், புகலூர் நகராட்சியில் இருந்து புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால்

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான பூர்த்தி செய்து தூய்மை பணிகளை மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 11 பணியாளர்களும் அதே போன்று பள்ளப்பட்டி நகராட்சியில் இருந்து 11 பணியாளர்கள் சென்னை மாவட்டத்திற்கு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கு தேவையான பாதுகாப்பு கவசங்கள், உபகரணங்கள் உள்ளிட்டவை எடுத்துச் செல்கின்றனர். இவர்களுக்கு ஆலோசனை வழங்கி புகலூர் நகராட்சி தலைவர் குணசேகரன் மற்றும் அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *