ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமானவர் சந்திரபாபு நாயுடு . இவர் குண்டூர் மற்றும் நெல்லூரில் பொதுக் கூட்டங்கள் நடத்தி இருந்தார். அந்த பொதுக்கூட்டங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இது ஆந்திர மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையடுத்து பொதுக்கூட்டங்கள் நடத்த ஜெகன்மோகன் ரெட்டி அரசு தடை விதித்திருக்கிறது. இந்நிலையில் குப்பம் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டம் நடத்தி இருக்கிறது. இதில் கலந்துகொள்ள அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு காரில் வந்திருக்கிறார். இதை அறிந்த போலீசார் குடுபள்ளி அருகே சந்திரபாபு நாயுடுவின் காரை வழிமறித்து உள்ளனர். பொதுக்கூட்டங்கள் நடத்த பிறப்பிக்கப்பட்டிருக்கும் தடை உத்தரவை சந்திரபாபு நாயுடு நாயுடு இடம் வழங்கி இருக்கிறார்கள். அதை பார்த்துவிட்டு தான் பொதுக்கூட்டத்தில் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என்று போலீசாரிடம் வாக்குவாதம் நடத்தி இருக்கிறார்.
இதை அடுத்து அந்த இடத்தை விட்டு பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு செல்ல முற்பட்டிருக்கிறார். இதனால் போலீசார் சந்திரபாபு நாயுடுவின் காரை பறிமுதல் செய்திருக்கிறார்கள். இதில் ஆத்திரமடைந்த சந்திரபாபு நாயுடு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார். பின்னர் அங்கு வந்த தனியார் பேருந்து மீது ஏறி நின்று மக்களிடையே பேசத் தொடங்கி இருக்கிறார்.