வங்க கடலில் உருவான மிக்ஜம் புயல் காரணமாக 2 நாட்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது . இதனால் நேற்று மாநர பேருந்துகள் நிறுத்தப்பட்டன. நேற்று இரவுடன் மழை ஓய்ந்தது. ஆனாலும் இன்னும் வெள்ளம் வடியவில்லை. புயல் சின்னம் நேற்று இரவில் ஆந்திராவை நோக்கி நகரத் தொடங்கியதால் இப்போது ஆந்திராவில் பேய்மழை கொட்டுகிறது.
சென்னையில் இப்போது தான் வெள்ளம் வடியத்தொடங்கியுள்ளது. இதனால் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேரம் செல்லசெல்ல வழக்கமான எண்ணிக்கையில் படிப்படியாக முழ அளவில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிவாரணப்பணிகளுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். ஆனாலும் சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும் என தெரிகிறது.
இந்த நிலையில் இன்று காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் நிவாரணப்பணிகளை பார்வையிட்டார். முகாம்களில் தங்கி இருப்பவர்களை பார்த்து அவர்களிடம் முகர் ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் பல இடங்களில் சாலைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மாமல்லபுரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.