Skip to content
Home » ரயிலில் ஆபாச சைகை.. கோவை பாதிரியார் கைது…

ரயிலில் ஆபாச சைகை.. கோவை பாதிரியார் கைது…

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் ஜேஜிஸ் (48). கர்நாடக மாநிலம் மங்களூருவில் வசித்து வருகிறார். கோவையில் உள்ள ஒரு சர்ச்சில் பாதிரியாராக உள்ளார். இவர் மங்களூரு-சென்னை ரயிலில் கோவைக்கு புறப்பட்டார். ஜேஜிஸ் பயணம் செய்த பெட்டியில் மிகவும் குறைவாகவே பயணிகள் இருந்தனர். இதற்கிடையே ரயில் காசர்கோட்டை தாண்டி சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த பெட்டியில் இருந்த மலப்புரத்தை சேர்ந்த 35 வயதான ஒரு இளம்பெண் முன்பு பாதிரியார் ஜேஜிஸ் ஆபாச போஸ் கொடுத்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அடுத்த பெட்டியில் இருந்த தனது கணவருக்கு போன் செய்து விவரத்தை கூறினார். உடனே அவர் இது குறித்து ரயில்வே போலீசுக்குத் தகவல் கொடுத்தார். ரயில் கண்ணூர் வந்ததும் பாதிரியார் ஜேஜிசை ரயில்வே போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர் காசர்கோடு ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைக்குப் பிறகு காசர்கோடு ரயில்வே போலீசார் அவரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *